வெசாக் பௌர்னமி தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர், ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் 5 வெசாக் வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 11 மின் விளக்கு தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த காலப்பகுதியில் கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 1900 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பயன்படுத்தப்படவுள்ள அதேவேளை, போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 1100 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெசாக் வாரத்தில் விபத்துக்கள் அதிகரிக்க கூடும் என்பதால் வாகன சாரதிகளும் பொது மக்களும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோரியுள்ளார்.