(FASTNEWS | COLOMBO) – வழமைபோல் இம்முறையும் வெசாக் நிகழ்வுகளை நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதை மகாநாயக்க தேரர்களுக்கு அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் நேற்று(12) கோட்டே ஸ்ரீ கல்யானி சாமஸ்ரீதர்ம மகா சபையின் மாநாயக்கர் இத்தேபானே தம்மாலங்கார தேரரை சந்தித்து ஆசி பெற்ற பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், வெசாக் பண்டிகையை கைவிட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.