வெசாக், பொசான் நோன்மதி கால சகல அன்னதான சாலைகளையும் சுகாதார மருத்துவ பணிமனையில் பதிவு செய்வது அவசியம் என சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் பணிப்பாளரான விசேட நிபுணர் பபா பலிகவடன தெரிவித்துள்ளார்
சுகாதார பணிமனையில் நேற்று(23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வெசாக், பொசான் நோன்மதி காலங்களில் அன்னதான சாலைகளை நடத்துவது பற்றி சுகாதார அதிகாரிகலுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தானமாக வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வது தொடர்பான யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பொலித்தீன் பாவனையை தடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதென்றும் மருத்துவர் பபா பலிகவடன குறிப்பிட்டுள்ளார்.