வெசாக் பண்டிகையை முன்னிட்டு களுத்துறை மாவட்டத்தில் அன்னதான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ள தரப்புகள் களுத்துறை பிரதேச சுகாதார சேவை அலுவலகத்தின் அனுமதியை பெற்றுக் கொள்வது கட்டாயம் என மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் வெசாக் வாரத்தில் அன்னதானம் வழங்குவோர் குறித்த பிரதேச சுகாதார சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் உணவுப் பண்டங்கள் அவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நீர், இடம் ஆகியவற்றை பரிசோதனை செய்த பின்னரே அதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது.
வெசாக் வாரத்தில் களுத்துறை மாவட்டத்தில் நடத்தப்படும் அன்னதானம் வழங்கும் இடங்களை பரிசோதனை செய்ய 50 பேர் கொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர் குழு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.