வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது இடைக்கால அறிக்கை இன்று(08) சட்டமா அதிபரிடம்…

(FASTNEWS|COLOMBO) ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக, நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் முதலாவது அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,தற்போது இரண்டாவது அறிக்கை நேற்று(07) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில்,இரண்டாவது இடைக்கால அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கமைவாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்த அறிக்கை இன்று(08) சட்டமா அதிபரிடம் பொறுப்பளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.