(FASTNEWS|COLOMBO) – சட்டவிரோத வெடி பொருட்களை வைத்திருப்பவர்கள் தொடர்பில் எதிர்வரும் 20ம் திகதியின் பின்னர் தொடர்ச்சியாக சோதனை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்களுக்கு அவற்றை ஒப்படைப்பதற்காக கால அவகாசம் எதிர்வரும் 20ம் திகதி காலை 6 மணி வரை நீடிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த திகதியின் பின்னர் நாடு பூராகவும் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சட்டவிரோத வெடிபொருட்கள் வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.