(FASTNEWS|COLOMBO) ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரில் தாம் பெற்ற வெண்கலப் பதக்கத்தை ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இலங்கை வீராங்கனை விதுஷா லக்ஷானி அறிவித்துள்ளார்..
23 ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கத்தை விதுஷா லக்சானி ஈட்டிக்கொடுத்தார்.
23 ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டிகள் கட்டாரின் கலிபா விளையாட்டரங்கில் நடைபெறுகின்றன.
இதில் மகளிருக்கான முப்பாய்ச்சல் போட்டியில் 13.53 மீட்டர் தூரத்திற்கு பாய்ந்த விதுஷா லக்சானி வெண்கலப்பதக்கம் வென்றார்.
இலங்கைக்கு பதக்கம் வென்று கொடுத்த ஒரே வீராங்கனை என்ற பெருமை லக்ஷானியையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.