சூடான எண்ணெய் மெனிக்யூர் பல பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த மேனிக்யூர் முறை நல்ல பலனைத் தருவதாக செய்திகள் கிடைக்கின்றன.
தேவையான பொருட்கள்:
சூரியகாந்தி எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய்
சிறிதளவு பாதாம் எண்ணெய்
விட்டமின் ஈ எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் டீ ட்ரீ எண்ணெய் விட்டமின் ஈ மாத்திரை
செய்முறை:
1. மேலே கூறிய எல்லா மூலப் பொருட்களையும் கலந்து மைக்ரோவேவில் வைத்து 30 நிமிடங்கள் சூடாக்கவும்.
2. இந்த கலவையுடன் விட்டமின் ஈ மாத்திரையை உடைத்து சேர்க்கவும்.
3. எண்ணெய்யை சற்று நேரம் ஆற வைக்கவும்.
4. ஓரளவிற்கு ஆறியவுடன், இந்த எண்ணெய்க் கலவையில் உங்கள் நகங்களை மூழ்க வைக்கவும். முற்றிலும் எண்ணெய் குளிர்ச்சியாக மாறும்வரை இதனை செய்யவும்.
5. இந்த சுகமான உணர்வை மீண்டு பெற, மீண்டும் சற்று நேரம் இந்த எண்ணெய்யை சூடாக்கி, மறுபடி கைகளை நனைத்து வைக்கலாம்.
6. கைகளில் சிறிதளவு எண்ணெய்யை எடுத்து, முன்புறம் பின்புறம், உள்ளங்கை என்று எல்லா இடத்திலும் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.
7. முழுவதும் மசாஜ் செய்தவுடன் சாதாரண நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள்.
8. சுத்தமான துண்டால் கைகளைத் துடைத்துக் கொள்ளுங்கள்.
9. இத்துடன் உங்கள் எண்ணெய் சிகிச்சை முடிவடைகிறது.
10. ஒரு வாரத்தில் இரண்டு முறை உறங்கச் செல்வதற்கு முன் இதனை முயற்சிக்கலாம்.
11. சிகிச்சைக்கு பிறகு கைகளில் மாயச்ச்சரைசர் தடவுவதை மறக்க வேண்டாம்.
நன்மைகள் சூடான எண்ணெய் மெனிக்யூர் செய்வதால் உங்கள் நகங்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அவற்றுள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 1
தொடர்ந்து இந்த சிகிச்சையை செய்வதால், நாளடைவில் உங்கள் சரும நோய்கள் நீங்குகின்றன. சூடான எண்ணெய் மெனிக்யூர் , நகங்களை சுத்தமாக்கி, தளர்த்துகின்றது. மேலும் நகக் கண்களில் தோற்றத்தை நாளடைவில் மேம்படுத்துகிறது. உடைந்த நகங்கள் எளிதில் இந்த செயல்முறையால் எளிதில் அகற்றப்படுகின்றன. உங்கள் நகங்கள் அழுக்கில்லாமல் சுத்தமாக இருப்பதால் விரைந்து வலிமையாக மற்றும் வேகமாக வளர்கின்றன. உங்கள் கை மூட்டு பகுதி மற்றும் கை விரல்களில் நெகிழ்வுத்தன்மை மேம்படுகிறது. சூடான எண்ணெய் மேனிக்யூர் செய்வதால் நகங்கள் விரைந்து முதிர்ச்சி அடையாமல் தடுக்கப்படுகின்றன.