வெனி­சு­லாவில் மின் தட்­டுப்­பாடு அரச ஊழி­யர்­க­ளுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பணி

வெனி­சு­லாவில் நிலவும் மின்­சாரத் தட்­டுப்­பாடு கார­ண­மாக அரச ஊழி­யர்­க­ளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்­டுமே பணி எனும் கட்­டுப்­பாட்டை அரசு விதித்­துள்­ளது.

மின்­சார நெருக்­கடி கார­ண­மாக சுமார் 20 இலட்சம் அரச ஊழி­யர்கள் இனி வாரத்தில் திங்கள் மற்றும் செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் பணிக்கு வந்தால் போதும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நட­வ­டிக்கை தற்­கா­லி­க­மா­னது என்றும், மின் பிரச்­சினை தீரும் வரை இது நடை­மு­றையில் இருக்கும் எனவும் நாட்டின் துணை ஜனா­தி­பதி அரிஸ்­டோ­புலோ இட்ஸ்­ரூயிட்ஸ், தேசியத் தொலைக்­காட்­சியில் அறி­வித்­துள்ளார்.

அதேபோல் பாட­சா­லைகள் மற்றும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் மூடப்­பட்­டி­ருக்கும். கால­நிலை மாற்றம் கார­ண­மாக நீர்­பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது என்றும், அதனால் மின் உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்றும் அரசு கூறு­கி­றது.

ஆனால், பிரச்­சி­னையை அரசு சரியாக கையாளாததாலேயே இது முற்றியுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.