வெனிசூலாவின் உப ஜனாதிபதிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை…

கடந்த மே மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், நீதியாகவும் சுதந்திரமானதாகவும் நடைபெறவில்லை என வெனிசூலாவின் உப ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

இதன் பிரகாரம், உப ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகியூஸ் (Delcy Rodríguez) மற்றும் 11 அதிகாரிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் பிரவேசிப்பதற்குத் தடையுடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலுள்ள அவர்களின் சொத்துக்களும் முடக்கப்படவுள்ளன.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதுடன், குறித்த இந்தத் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.