தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோவிற்கு (Juan Guaidó) அந்நாட்டு உயர் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளதுடன், குவைடோவின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜூவான் குவைடோ தம்மைத் தாமே அறிவித்ததன் பின்னர் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை நிலையையடுத்து, அந்நாட்டு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள், வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோவை அங்கீகரித்திருந்தன.