வெனிசூலாவில் இரண்டு தொலைக்காட்சி நிலையங்களுக்கு அரசாங்கம் தடை விதிப்பு

வெனிசூலாவின் தணிக்கை சட்டங்களைப் பிரயோகித்து இரண்டு தொலைக்காட்சி நிலையங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

கொலம்பியா நிறுவனங்களுக்கு சொந்தமான கரகோல் மற்றும்  RCN  தொலைக்காட்சி நிலையங்கள் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொலம்பியா ஜனாதிபதி தனக்கு எதிரான சதி முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வெனிசூலா ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ள நிலையிலேயே கொலம்பியா நிறுவனங்களுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வென்சூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ தலைமையிலான அரசு ஊடகங்கள் மீது அடக்கு முறையை பிரயோகிப்பதாக தடை செய்யப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை ஸ்பானிய மொழியில் செயற்படும் தொலைக்காட்சி நிலையம் ஒன்றுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.