வெயாங்கொட பிரதேசத்தில் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

வெயாங்கொட, திஎல்ல ஓயாவில் நீராட சென்ற 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(21) பிற்பகல் 01.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு மாணவன் நீரில் முழ்கியதையடுத்து அவரை காப்பாற்ற முயற்சித்த மற்றைய மாணவனும் நீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.