கோடையில் அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறும். மேலும் வெயிலில் சிறிது நேரம் சென்றாலே, சருமம் பயங்கரமாக எரியும். அதோடு, பருக்கள், வியர்க்குரு போன்ற சரும பிரச்சனைகளை அதிகம் சந்திக்கக்கூடும். இதற்கு தர்பூசணியைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் வைத்துக் கொள்ள முடியும்.
தர்பூசணி மற்றும் தயிர்:
தர்பூசணி ஜூஸ் மற்றும் தயிரை சம அளவில் எடுத்துக் கொண்டு, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் தயிர் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றும் மற்றும் தர்பூசணி சரும செல்களில் உள்ள பாதிப்பை சரிசெய்யும்.
தர்பூசணி மற்றும் வாழைப்பழம்:
வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் தர்பூசணி சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் மட்டுமின்றி கை, கால் முழுவதும் தடவி, ஊற வைத்துக் கழுவுங்கள். இதனால் சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படுவதோடு, முகப்பரு பிரச்சனையும் தடுக்கப்படும்.
தர்பூசணி மற்றும் தேன்:
கோடையிலும் சரும வறட்சியை சந்திப்பவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் சிறந்தது. அதற்கு தர்பூசணி சாற்றுடன் சிறிது தேன் கலந்து, முகம், கை, கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் தேன் சருமத்தில் ஈரப்பசையை தக்க வைப்பதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும்
தர்பூசணி மற்றும் பால் பவுடர்:
பால் பவுடரை தர்பூசணி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் வெயிலால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் குறைவதோடு, சரும கருமையும் நீங்கும்.