வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…

க்ரீன் டீயில் உள்ள உட்பொருட்களும், மருத்துவ குணங்களும் தான் காரணம். க்ரீன் டீ மிகவும் சுவையுடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.

எடை குறைவு:
சிகிச்சை க்ரீன் டீயினால் கிடைக்கும் பிரபலமான நன்மைகளுள் ஒன்று தான் எடை குறைய உதவும் என்பது. இதில் உள்ள பாலீஃபீனால் என்னும் சத்து தான் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் மற்ற டீக்களை விட க்ரீன் டீயில் தான் ஏராளமான கேட்டசின்கள் உள்ளன.

கொழுப்பு குறைவு:
கேட்டசின்கள் என்பது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள். இவை உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைத் தடுக்கும். க்ரீன் டீயில் கேட்டசின், கேலோகேட்டசின், எபிகேட்டசின், எபிகேலோகேட்டசின், எபிகேட்டசின் கேலேட் போன்ற பொருட்கள் உள்ளன. அத்துடன் க்ரீன் டீயில் மிகவும் சுறுசுறுப்பான எபிகேலோகேட்டசின்-3-கேலேட் அதிகம் உள்ளது.

புற்றுநோய்:
சில ஆய்வுகளில் எபிகேலோகேட்டசின்-3-கேலேட்டிற்கு, உடலில் வளரும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அழிப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்தத்தை சுத்தம் செய்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

உடல் ஆற்றல்:
வெறும் வயிற்றில் க்ரீன் டீயைக் குடிக்கும் போது, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் காப்ஃபைன் உடலின் ஆற்றலை அதிகரித்து மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களை கரையச் செய்து, உடல் எடை குறைய வழிவகுக்கும். இப்போது க்ரீன் டீயைக் குடிப்பதால் கிடைக்கும் இதர நன்மைகளைக் காண்போம்.

வாய் துர்நாற்றம்:
க்ரீன் டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும்.

சொத்தை பல்:
ஒருவர் தினமும் ஒரு கப் க்ரீன் டீயைக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அவர்களுக்கு சொத்தைப் பல் வரும் அபாயம் குறையும். இதற்கு அதில் உள்ள பாலிஃபீனால்கள் மற்றும் ப்ளூரைடு தான் முக்கிய காரணம்

கொலஸ்ட்ரால்:
கொலஸ்ட்ரால் பிரச்சினை இருப்பவர்கள், க்ரீன் டீயை வெறும் வயிற்றில் ஒரு கப் குடித்தால், அதில் உள்ள மருத்துவ பண்புகள் உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலை சிக்கென்று ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

யரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக்கூடாது?
* இதய நோய், அல்சர், உளவியல் கோளாறுகள் மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், க்ரீன் டீயைக் குடிக்கும் முன் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ள வேண்டும்.
* அதோடு ஹீமோதெரபி, ஆன்டிபயாடிக்ஸ், இரத்தத்தை மெலியச் செய்யும் மருந்துகளை உட்கொள்பவர்களும், க்ரீன் டீயைக் குடிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.