வெற்றிக்கான காரணம் மற்றும் மென்டிஸ் குறித்து சங்கா கருத்து…

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் அபாரமானது என இலங்கை முன்னாள் டெஸ்ட் தலைவர் குமார் சங்கக்கார அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஆரம்ப துடுப்பாட்ட வீரரின் ஒத்துழைப்புடன் பாரிய புள்ளிகளை பெற்றுக் கொள்ள முடிந்தமை சிறந்த முன்னுதாரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, குசல் மென்டிஸ் தன்னால் இயன்றதை சாதித்துக் காட்டினார். அதனை நினைவில் வைத்து தொடர்ச்சியாக கடைபிடிக்க வேண்டும் என சங்கா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.