வெற்றியினை நோக்கி பாகிஸ்தான் அணி.. – எதிர்பார்ப்புக்களை கனவாக்குமா இலங்கை அணி..

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று(10) இடம்பெறவுள்ளது.

போட்டியில் வெற்றி பெற 317 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி நேற்றைய(09) ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தாலும் 6வது விக்கெட் இணைப்பாட்டம் பிரிக்கப்படாத 146 ஓட்டங்களை அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் மற்றும் அஸாட் ஷாபிக் ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.

அஸாட் ஷாபிக் 86 ஓட்டங்களையும், சப்ராஸ் அஹமட் 57 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் போட்டியின் இறுதிநாளான இன்று(10) பாகிஸ்தான் அணிக்கு வெற்றி பெற 5 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் 119 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.

 

(rizmira)