வெற்றிலைச் சின்னத்தில் களமிறங்க சிறுபான்மைக் கட்சிகளுக்கு அழைப்பு..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சிறுபான்மையின கட்சிகளையும் இணைத்து க்கொண்டு, எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், வெற்றிலைச் சின்னத்தில் களமிறங்குவதற்கு, பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் கட்சியின் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, தமிழ் அரசியல் கட்சிகள், கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற, முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஆகியனவற்றுடன், தற்போதைக்கு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக கட்சியின் உள்ளக தகவல் தெரிவிக்கின்றது.

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீது வைத்திருக்கின்ற நம்பிகையை கவனத்தில் கொண்டே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இவ்வாறு களத்தில் குதித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

மேலும், எந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும், நிபந்​தனைகள் இன்றியே, கூட்டுச் சேர்த்து கொள்வதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

(riz_mira)