வெற்றிலை, பாக்கு, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை…

(FASTNEWS | COLOMBO) – அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்கு, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும், விற்பனைச் செய்வதற்கும் அரசாங்கம் தடை விதிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையில் சமர்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புற்று நோயாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, புற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.