வெலிக்கடைச் சிறைச்சாலை காணி விற்பனைக்கு – அஜித் பெரேரா

வெலிக்கடைச் சிறைச்சாலை காணி விற்பனை செய்யப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலை ஹொரண பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பொரளை நகரின் 48 ஏக்கர் காணிப் பரப்பினை வெலிக்கடைச் சிறைச்சாலைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹொரண மில்லானிய பகுதிக்கு கைதிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதுடன், இந்தப் பகுதியில் ஓர் கைத்தொழிற் பயிற்சி மையமொன்றும் அமைக்கப்பட உள்ளது.

1841ம் ஆண்டு பிரித்தானியர்களினால் வெலிக்கடைச் சிறைச்சாலை நிர்மாணிக்கப்பட்டது.

இந்தப் பகுதி வர்த்தக நகரமாக மாற்றப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.