வெலிக்கடை சிறைச்சாலையினுள் மேலதிக CCTV கமராக்கள்…

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்று வருவதாக கூறப்படும் குற்றச் செயல்களை கண்காணிப்பதற்கு சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து கட்டுப்படுத்தும் வகையிலான CCTV கமரா கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் தற்பொழுது சிறைச்சாலையில் காணப்படும் கமராக கட்டமைப்பிற்கு மேலதிகமாக மேலும் கமராக்கள் பொருத்தப்படவுள்ள நிலையில், இந்த கமராக்கள் இதுவரையில் வெலிக்கடை சிறைச்சாலையிலேயே கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. எனினும், இனி வரும் காலங்களில் சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து இந்த கமரா கட்டமைப்பு கட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.