வெலிக்கடை சிறைச்சாலை இடமாற்றம் குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு.

வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணை பகுதியில் அமைப்பது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது.

அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

ஹொரணை சொரணவத்தை பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை புதுக்கடை நீதிமன்றத்திற்கு அண்மையில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிகமாக கைதிகளை தடுத்து வைப்பதற்கு தடுப்பு நிலையம் ஒன்று அமைக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.