நேற்று(28) மாலை கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவையும், சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவையும் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
———————————————————–UPDATE
வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் – இரு முக்கிய அதிகாரிகள் கைது….
கடந்த 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று(28) கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலரை கொலை செய்த குற்றதிற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.