கொழும்பு வெலிக்கடை மற்றும் ராஜகிரிய ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை பிரிவு தெரிவித்துள்ளது.
ராஜகிரியவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் பணிகள் காரணமாக குறித்த பகுதிகளுக்கான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சாரதிகள் மாற்று வழியினை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல் துறை பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
####