(FASTNEWS | COLOMBO) – ஹெரோய்ன் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த “வெலிவிட சுத்தா” எனப்படும் வசந்த திஸாநாயக (வயது 32) என்பவர் நேற்றைய தினம் (05) விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே, இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று (06) இவரை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.