வெலே சுதாவின் வழக்கு டிசெம்பர் 13ஆம் திகதி வரை ஒத்திவைப்பு…

பிரபல போதை வர்த்தகர் வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமார மற்றும் அவரது மனைவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகம் மூலம் உழைக்கப்பட்ட பணம் மூலம் 17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை கையகப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கின் விசாரணை கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராய்ச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹெரோயின் விற்பனை மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு கோட்டே, தெஹிவளை, ராஜகிரிய பகுதிகளில் 170 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணி மற்றும் சொத்துக்களை சேர்த்ததன் மூலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றமெனத் தெரிவித்து, வெலே சுதா உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.