6.7 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தொடரப்பட்டுள்ள வழக்கு இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மே மாதம் 3ம் திகதி முதல் வழக்கு விசாரணை முன்னெடுக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் லலித் ஜயசூரிய நேற்றைய தினம் உத்தரவிட்டார்.
இந்த வழக்குடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் அறிவித்துள்ளார்.
2002ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து 6.7 கிராம் எடையுடைய போதைப் பொருளை வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வெலே சுதாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஏற்கனவே விசாரணை செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் வெலே சுதாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானிலிருந்து பாரியளவு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டமை குறித்து வெலே சுதாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.