வெல்ல நிவாரணத்தில் மும்மடங்காகிய தக்காளி….

ஒரு கிலோகிராம் தக்காளியின் உண்மையான விலை 200 ரூபாவாக இருக்கையில் வெள்ள அகதிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட உணவுக் கணக்கில் கூட்டுறவுக் கடையொன்றில் 800 ரூபாய்க்கு ஒரு கிலோகிராம் தக்காளி வாங்கப்பட்டதாகக் காட்டப்பட்ட கணக்கை கம்பஹா மாவட்ட பிரதேச செயலாளர் அலுவலக அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்த மாவட்டத்தால் அரச அதிகாரிகள் சமைத்த உணவு பரிமாறினர்.

இந்த உணவைத் தயாரிப்பதற்காக அதிகாரிகள், ஒரு கூட்டுறவுக் கடையிலிருந்து பொருட்களைக் கடனாக வாங்கினர். எனினும், இவ்வாறு வாங்கப்பட்ட பொருட்களுக்கான கணக்குகள் பிரதேச செயலகத்துக்கு அனுப்பப்பட்ட போது ஒரு கிலோகிராம் தக்காளி ரூபாய் 800 வீதம் வாங்கப்பட்டதாகக் கணக்கில் காட்டப்பட்டிருந்தது.

இந்தக் கணக்கைப் போலியெனக் கண்ட கம்பஹா மாவட்ட பிரதேச செயலாளர் அலுவலக அதிகாரிகள் அதற்கான பணத்தைச் செலுத்த மறுத்துவிட்டனர்.