வெளிநாடு சென்றுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து பணம் அறவிட நடவடிக்கை…

பட்டப்பின்படிப்பு மற்றும் ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று மீள நாடு திரும்பாத 486 பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் விபரங்கள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடு சென்றுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து 813 மில்லியன் ரூபாய் அறவிடவேண்டியுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் விஜதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சட்ட விதிகளுக்கு அமைவாக இந்த அறவீடு மேற்கொள்ளப்படும் எனவும், இத்தொகை எமது பல்லைக்கழகங்களுக்கு உரித்தானது.

இது தொடர்பில் சில விரிவுரையாளர்கள் மற்றும் அவர்களின் சாட்சிகளாகக் கையொப்பமிட்டுள்ள சிலருக்கு எதிராக தற்போது வழக்கு தொடரப்படவுள்ளது என உயர்கல்வி அமைச்சர் விஜதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.