(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
பிரதமர் பதவியை இராஜினாமா செய்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதை தொடர்ந்து, பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார் என Colombo Gazzette இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெளிநாடொன்றிற்கு பிள்ளையான் படகு மூலம் தப்பிச்சென்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசியாவிற்கு தப்பிச்சென்றுள்ள பிள்ளையான் அங்கிருந்து ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயற்சிசெய்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் அவர் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
