(FASTGOSSIP | COLOMBO) – வெளிநாட்டவர்கள் இருவர் கலாச்சார நிலமே ஆடையினை அணிந்தவாறு கண்டி தலதா மாளிகை அருகே அமையப் பெற்றுள்ள பிரபல ஹோட்டல் அருகே அறிக்கை படமொன்று எடுக்கும் போது அங்கு சற்றுப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஓரினச் சேர்க்கை திருமண முறைமையினை குறிக்கோளாக கொண்டு குறித்த அறிக்கை திரைப்படம் தயாரிக்கப்படுவதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை திரைப்பட இயக்குனர் இங்கிலாந்து நாட்டவரை சேர்ந்தவர் என்றும், இந்நாட்டில் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், உரிய அதிகாரிகளின் அனுமதியுடன் தான் குறித்த படமெடுப்பு இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
பிரதேசவாசிகளால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், குறித்த படமெடுப்பு நிறுத்தப்பட்டு பதிவுகள் அழிக்கப்பட்டதாக சுற்றுலா பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.