கடந்த இரண்டு தினங்களாக மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கனியவள ஊழியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நாளாந்த சேவைகளை முன்னெடுக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்ககூடியதாக உள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வுக்கான எழுத்துமூல உறுதி கிடைக்கும் வரையில் வேலைநிறுத்தத்தை கைவிடபோவதில்லை என கனியவள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விமானங்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கான மேற்கொள்ளபப்டும் விமான சேவைகள் பாதிப்படையலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலை நீடிக்கும் பட்சத்தில் விமான சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகி, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று(20) ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.…
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இழந்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கும்போது நல்லூரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன் சரத் பிரேம சந்திரவிற்கு அவரின் மரணத்தின் பின் உப…