2017ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட கடன் தொகையில் வெளிநாட்டு நாணயக் கடன் வசதிகளை திரட்டிக் கொள்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இரண்டு குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
நெறிப்படுத்தும் குழு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு ஆகிய இரண்டு குழுக்களையே நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
திறைசேரி, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் உள்ளடங்கியதாகவே, இக்குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.