கடந்த ஆட்சி காலத்தின் போது, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளுள், நாட்டுக்கு பயனுள்ளவற்றை மாத்திரமே முன்கொண்டு செல்லவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு விஜயங்களின் போதும், வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கை வரும் போதும் ஏற்படுத்திக் கொள்ளப்படுகின்ற உடன்படிக்கைகள் தொடர்பான கொள்கை குறித்து ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றிருந்தது.
இதன்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் தொடர்பிலும் அவற்றை அமுலாக்குதல் மற்றும் பின்பற்றப்பட்ட கொள்கைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த எதிர்காலத்தில் வெளிநாட்டு தூதுவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

