வெளிநாட்டு சதித்திட்டம் பற்றி பேசும் கூட்டு எதிர்க்கட்சிக்கு நாட்டுத்துப்பாக்கிகள் பற்றிய அறிவே கிடையாதாம்..

தேசியப் பாதுகாப்பு பற்றியோ பாதுகாப்பு விவகாரங்கள் பற்றியோ எந்த அடிப்படை அறிவும் இல்லாத கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் லாபங்களை கருத்திற் கொண்டு பொய்யாக பிதற்றுகின்றார்கள் என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்தி இருப்பதாக சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்புச் சம்பவம் புலம்பெயர் தமிழ் சக்திகளின் தேவைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டதாக பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சதித்திட்டம் பற்றி பேசும் கூட்டு எதிர்க்கட்சிக்கு நாட்டுத்துப்பாக்கிகள் பற்றிய அறிவே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவம், பிரபுக்கள் பாதுகாப்பு, யுத்த தந்திரோபாயங்கள், புலனாய்வு விவாகரங்கள் பற்றி எதுவும் தெரியாதவர்கள் இன்று வெறுமனே கூச்சலிடுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சொட் கன் ஒன்றுக்கும் ரீ56 துப்பாக்கி ஒன்றுக்கும் இடையில் என்ன வித்தியாசம் எனத் தெரியாதவர்களே இவ்வாறு பாதுகாப்பு பற்றி பாடம் எடுக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஆயுதக் களஞ்சியசாலைகளில் தோட்டாக்கள், ரவைகள் மிதமிஞ்சிய அளவில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் வரையிலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் துப்பாக்கி ரவைகள் மற்றும் தோட்டாக்களை இறக்குமதி செய்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கில் காணப்பட்ட சில ஆயுதக் களஞ்சியங்கள் கலைக்கப்பட்டு அந்த ஆயுதங்களும் வேறும் களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டதாகவும் இதனால் சில ஆயுதக் களஞ்சியங்களில் அதிகளவு ஆயுதங்கள் பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தரகுப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தோட்டாக்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இதனால் பாரியளவு நட்டம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டு மற்றும் 2014ம் ஆண்டுகளில் வீரவில, மத்தேகொட பிரதேசங்களில் இராணுவ ஆயுதக் களஞ்சியங்களில் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் இந்தக் காலப்பகுதியில் நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக கோதபாய ராஜபக்ஸ கடமையாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாலாவ வெடிப்புச் சம்பவத்தின் பொறுப்பினை ஏற்று பதவி விலக வேண்டுமாயின், கோதபாயவும் பதவி விலகியிருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான ஆட்சி முறையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் உடன்பாடு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை போன்ற சிறிய நாட்டில் அவ்வாறான தீர்வுத் திட்டம் வெற்றியளிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

50 வீதமான தமிழர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சமாதானத்தை கட்டியெழுப்ப அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தம் வெற்றிகொள்ளப்பட்ட காரணத்திற்காக யுத்தத்தில் பங்கேற்ற காரணத்திற்காக சட்டத்தை மீறுவதற்கு இடமளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இவர் படைவீரர் இவர் கொலை செய்தாலும் இவரை ஒன்றும் செய்யக் கூடாது என எவரும் கூறினால்’ அதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் இழைத்திருந்தால் அதற்கான தண்டனை அனுபவிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.