9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரட் தொகையுடன் பெண்ணொருவர் இன்று(19) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு விமான நிலைய பிரிவால் கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண் 49 வயதான மதுரங்குளி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண்ணிடமிருந்து 99 சிகரட் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.