வெளிநாட்டு தம்பதிக்கு மைதானத்தில் நடந்த கொடுமை [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தம்பதிக்கு எதிர்பாரத விதமாக மோசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேற்கிந்தியதீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த வெளிநாட்டு பெண் தனது உடலின் மீது இலங்கையின் தேசிய கொடியை போர்த்தியிருந்தார்.

பின்னர், குடிபோதையில் அவ்விடத்திற்கு சென்ற இலங்கையர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதுடன் அந்த கொடியை அகற்ற முயற்சித்துள்ளார்.

குறித்த தம்பதிகள் மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த செயற்பாட்டுக்கு பலரும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.