(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்களான ஜான்டி ரோட்ஸ், பிரெட் லீ ஆகியோரை பயிற்சியாளர்களாக நியமிக்க இலங்கை கிரிக்கெட் அணி பரிசீலனை செய்து வருகிறது.
கிரிக்கெட்டில் தலைசிறந்த காப்பாளராக கருதப்படுபவர் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ். மற்றும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிரெட் லீ. இருவரையும் முறையே கள மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இளநகை அணி உலகக் கிண்ண போட்டியில் மோசமான தோல்வியை தழுவியதால் பயிற்சியாளர்களை, இலங்கை கிரிக்கெட் சபை அதிரடியாக நீக்கியமை குறிப்பிடத்தக்கது.