இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயற்சித்த இருவரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 7.8 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்தில் 26 வயது மற்றும் 59 வயதுடைய இரு சீன பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விமானநிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.