வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற ஒருவர் கைது…

ஒரு தொகை வெளிநாட்டு பணத்தை சட்டவிரோதமாக சீனாவுக்கு கடத்த முயன்ற இந்திய பிரஜை ஒருவர் நேற்று(21) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

54 வயதான இந்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 60 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை குறித்த நபரிடம் இருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.