(FASTNEWS|COLOMBO) அவிஸ்ஸாவளை – உக்வத்தை பிரதேசத்தில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி விசா இன்றி தங்கியிருந்த நைஜீரிய பிரஜைகள் இருவர் நேற்று(02) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிஸ்ஸாவளை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சந்தேகநபர்கள் இன்று அவிஸ்ஸாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், அவிஸ்ஸாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.