வெளிவிவகார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றார் ரவி..

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க,வெளிவிவகார அமைச்சராக தனது கடமைகளை இன்று(25) பொறுப்பேற்றார்.

வெளிவிவகார அமைச்சில் வைத்தே, ரவி கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க, கடந்த 22ம் திகதி இடம் பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இதேவேளை,புதிய நிதி அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)