மைத்திரி – ரணில் – ரவி மூவரடங்கிய விசேட கலந்துரையாடல்..

சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்து கொள்ளும் விசேட கலந்துரையாடல் ஒன்று சுமார் ஒரு மணி நேரமாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகவே வெளிவிவகார அமைச்சர் ரவி கருநாணாயக்க இன்று(09) இடம்பெற்றுவரும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு சமுகமளிக்கவில்லையெனவும் குறித்த செய்தி வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு அரசியலில் உள்ள பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

(rizmira)