கேரளாவில் பெய்து வரும் தொடர் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் நடிகர் பிரித்விராஜ் வீட்டில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பெரிய பாத்திரத்தின் மூலம் அவரது தாயார் மீட்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
தமிழில் மொழி, காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் பிரித்விராஜ் வீடு கொச்சியில் உள்ளது. கொச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரித்விராஜின் தாயாரும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை 4 பேர் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர். அந்த படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மலையாளம், தமிழ் திரையுலக நடிகர்கள் நிவாரண உதவி அளித்துள்ளனர். கேரள மக்களுக்கு உதவி செய்யுமாறு மலையாள நடிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
