வெள்ளநிலை மற்றும் மண்சரிவு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை இதுவரை 193 ஆக அதிகரித்துள்ளது.
மொத்தமாக 15 மாவட்டங்களில் 5 லட்சத்து 88 ஆயிரத்து 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபடியான மரணங்கள் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ள நிலையில், இதுவரையில் அங்கு 77 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 640 வீடுகள் முற்றாகவும், 5,329 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.
அதேநேரம், பாதுகாப்பான 368 இடங்களில், 76,902 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக அளவான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு 38,323 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 11,692 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 9,370 பேரும் முகாம்களில் தங்கி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
இதேவேளை, மின்சார தடைகள் குறித்த முறைப்பாடுகளுக்கு புதிய இலக்கத்தை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, 0113 030 303 என்ற இலக்கத்துக்கு மின் தடை குறித்த தகவல்களை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.