UPDATE – வெள்ளவத்தையில் ஏழு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததின் மீட்புப் பணிகள் STF ஒத்துழைப்புடன்..

வெள்ளவத்தை செவோய் திரையரங்கிற்கு பின்புறமாக அமைந்துள்ள  ஏழு மாடி கட்டிடமொன்று நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படும்போது இடிந்து விழுந்துள்ளது.

குறித்த விபத்தில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு இருந்த சுமார் 22 பேர் படுகாயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் 4 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவரின் நிலை கவலைக்கிடம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுமாணப் பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையிலேயே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு மீட்புப் பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவதுடன், மேலும் பலர் இதில் சிக்கியிருக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கட்டடத்திற்கு அண்மையில் உள்ள இன்னுமுள்ள கட்டடங்களும் இடிந்து வருவதாகவும் குறித்த பிரதேசத்திற்கு சுமார் 06 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

குறித்த சம்பவமானது இன்று(18) காலை 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் குறித்த வீதியில் வாகன போக்குவரத்து நெரிசல்கள் தற்போது காணப்படுவதில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)