உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன் வட மாகாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் சனிக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்தவுள்ளார்.
எதிர்வரும் 9ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் செய்ட் அல் ஹுசேன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட தரப்பினருடனும், சிவில் சமூக பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன் கடந்த செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன் மதிப்பீடுகளை செய்யவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.