வெள்ளி விடுமுறை தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குதல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொதுநிர்வாக அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்போது இந்த நடைமுறை எதிர்வரும் 24ஆம் திகதி முதல் அமுலாகும் எனவும் பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.