கண்களை நாம் பாதுகாப்பதால் பல நன்மைகள் நமக்கு ஏற்படும். இந்த பதிவில் கண்களை எவ்வாறு பராமரிப்பது, கண் இமைகளை எவ்வாறு காப்பது, அதனால் ஏற்படும் நன்மைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளை கரு:
முட்டையின் வெள்ளை கருவை மட்டும் நன்கு அடித்து கொண்டு அதனை கண்ணின் வெளி பகுதிகளில் தடவி மசாஜ் செய்யுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கண்ணை கழுவி விடுங்கள். இது கண்ணின் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்கும்.
ஆலிவ் எண்ணெய்:
கண் இமைகளை அழகு செய்ய, தூங்குவதற்கு முன் ஆலிவ் எண்ணெயை கண்ணின் இமைகளில் தடவி கொண்டு உறங்குங்கள். இது கண்களுக்கு குளிர்ச்சி தருவதோடு அடர்த்தியான கண் முடிகளையும் தரும்.
கற்றாழை:
கற்றாழை ஜெல்லை மட்டும் எடுத்து கொண்டு, அவற்றை இமைகளில் தடவி வந்தால் கண் இமைகள் அழகாக வளரும். அத்துடன் கண்ணின் அழகிற்கு பெரிதும் இது பயன்படுகிறது. மேலும், கண்ணில் ஏற்படும் தொற்றுகளையும் இது தடுக்கும்
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை வட்ட வடிவில் நறுக்கி கண்ணில் வைத்து 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கண்ணை கழுவினால் கண் மிருதுவாகும். மேலும் இதில் உள்ள காபிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் கண் வீக்கம், கண் எரிச்சல் போன்றவற்றை குணமாக்கும்.
கிரீன் டீ:
டீ போட்ட பிறகு கிரீன் டீ பேக்கை குளிர வைத்து, அதனை கண்களில் ஒத்தடம் கொடுத்தால், பல வகையான நன்மைகளை பெறலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஃப்ளேவனாய்ட்ஸ் கண்ணின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அத்துடன் இமைகளையும் நன்கு வளர செய்யும்.
நல்ல உறக்கம்:
எந்த வயதினராக இருந்தாலும் சீரான தூக்கம் அவசியம் வேண்டும். இல்லையென்றால் இது அவர்களின் கண்களை பெரிதும் பாதிக்கும். 7 மணி நேர தூக்கம் இருந்தாலே கண் சார்ந்த பல கோளாறுகளை வர விடாமல் தடுக்கலாம். அதிகாலையில் விரைவாக எழுந்து, இரவில் விரைவாக உறக்கினாலே கண் மிக அழகாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.