வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லரை விலை அறிவிப்பு…

நேற்று(12) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் வௌ்ளைச் சீனிக்காக கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி பொதி செய்யப்பட்ட வௌ்ளைச் சீனி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச விலையாக 105 ரூபா என்றும், பொதி செய்யப்படாத வௌ்ளைச் சீனி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச விலையாக 100 ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனி இறக்குமதியாளர்கள் அதிகபட்சம் ஒரு கிலோகிராம் சீனியை 92 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்மானி வௌியிடப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.